உகா, உகாய், உவா - Toothbrush Tree, Salvadora persica
குறுந்தொகை 363, செல்லூர்க் கொற்றனார், பாலை திணை – தோழி சொன்னது
கண்ணி மருப்பின் அண்ணல் நல் ஏறு
செங் கால் பதவின் வார் குரல் கறிக்கும்
மடக் கண் மரையா நோக்கி வெய்துற்று
புல் அரை உகாஅய் வரி நிழல் வதியும்
இன்னா அருஞ் சுரம் இறத்தல்
இனிதோ பெரும! இன் துணைப் பிரிந்தே?
Lord, will it be sweet
to separate from your sweet companion,
and go into the painful, harsh wasteland
where a noble, fine bull
with flower strand on his horns,
shelters in the dappled shade
of an ukāy tree with parched trunk,
and sighs as it eyes
a gentle-eyed, wild cow
grazing on long spears of arukam grass? Translated by Vaidehi
கண்ணி – garland, flower strand, மருப்பின் – on its horns, அண்ணல் நல் ஏறு – noble, fine bull, செங் கால் பதவின் – அருகம் புல்லின், Cynodon grass, வார் குரல் – long spears, கறிக்கும் – chews, மடக் கண் மரையா நோக்கி – looks at the innocent-eyed wild female cow, வெய்துற்று, புல் அரை உகாஅய் – dried trunk ukay tree, Toothbrush Tree, Salvadora persica, வரி நிழல் வதியும் – rests in its striped shade, இன்னா அருஞ் சுரம் – painful harsh path, இறத்தல் – to pass, இனிதோ பெரும – is it sweet my lord, இன் துணைப் பிரிந்தே – separating from loved one
நற்றிணை 66, இனிசந்த நாகனார், பாலை திணை – தலைவியின் தாய் சொன்னது
மிளகு பெய்தனைய சுவைய புன் காய்
உலறு தலை உகாஅய்ச் சிதர் சிதர்ந்து உண்ட
புலம்பு கொள் நெடுஞ் சினை ஏறி நினைந்து தன்
பொறி கிளர் எருத்தம் வெறி பட மறுகி
புன் புறா உயவும் வெந் துகள் இயவின்
நயந்த காதலற் புணர்ந்தனள் ஆயினும்
சிவந்து ஒளி மழுங்கி அமர்த்தனகொல்லோ
கோதை மயங்கினும் குறுந் தொடி நெகிழினும்
காழ் பெயல் அல்குல் காசு முறை திரியினும்
மாண் நலம் கையறக் கலுழும் என்
மாயக் குறுமகள் மலர் ஏர் கண்ணே.
A pigeon chases away the honeybees
and eats tasty pepper-like uka berries,
feels giddy and shakes his spotted neck in pain
regretting what he did.
My fascinating young daughter
went on that dusty hot path
to be with her lover.
Her gem-set, coin-strung waist jewel
might be twisted,
her garland might have lost its shape,
her bangles might be slipping down,
her flower like beautiful eyes might cry,
and her esteemed beauty might be lost,
even though she is with him. Translated by Vaidehi
மிளகு பெய்தனைய – like it is dropped pepper, சுவைய – tasty புன் காய் – dry berry, fruit, உலறு தலை உகாஅய்ச் – dried top uka trees, சிதர் – honeybees, சிதர்ந்து – chased away, உண்ட – ate, புலம்பு கொள் நெடுஞ் சினை – long branch, ஏறி – climb, நினைந்து தன் – think about what it did, பொறி கிளர் எருத்தம் – spotted neck, வெறி பட – shake hard, மறுகி – feel giddy, புன் புறா – sad pigeon, உயவும் – become sad, வெந் – hot, துகள் இயவின் – dusty path, நயந்த காதலற் புணர்ந்தனள் ஆயினும் – even if she has joined her lover, சிவந்து – redden, ஒளி மழுங்கி – become dull, அமர்த்தனகொல்லோ – it becomes, கோதை மயங்கினும் – if her garland is twisted, குறுந் தொடி நெகிழினும் – or her bangles loose, காழ் – gem, பெயல் – hanging, அல்குல் – waist, காசு – coin jewel, முறை திரியினும் – twisted, மாண் நலம் கையற – her beauty is lost, கலுழும் – crying, என் – my, மாயக் குறுமகள் – my fascinating little girl, மலர் ஏர் கண்ணே – beautiful flower like eyes